Tuesday 8 April 2014

டென்மார்க் பேட்மிண்டன் வீரருடன் டாப்சி திருமணம்?

நடிகை டாப்சிக்கு டுவிட்டர் மூலம் பேட்மிண்டன் விளையாட்டு வீரருடன் வளர்ந்த காதல் தற்போது முடிவுக்கு வந்து திருமணம் வரை சென்றுள்ளது.

ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை டாப்சி, அதன் பின்னர் வந்தான் வென்றான், ஆரம்பம் போன்ற தமிழ் படங்களிலும், பல தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் டுவிட்டரின் மூலம் அறிமுகமான டென்மார்க் நாட்டை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் Mathias Boe என்பவருடன் காதல் ஏற்பட்டதாக கோலிவுட்டில் கிசுகிசு கிளம்பியது.

இருவரும் பின்னர் நேரிலும் சந்தித்து தங்கள் காதலை வளர்த்ததாகவும் கூறப்பட்டது. Mathias Boe, பேட்மிண்டன் விளையாடும் சில போட்டிகளை நடிகை டாப்சி நேரில் பார்த்து அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து வந்ததாகவும் கூறப்பட்டது.

தற்போது டாப்சியின் காதல் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. டாப்சியின் வீட்டிலும், Mathias Boe வீட்டிலும் இவர்களுடைய காதலுக்கு க்ரீன் சிக்னல் கிடைத்துவிட்டதாகவும், விரைவில் இருவருக்கும் முறைப்படி திருமணம் நடக்கவுள்ளதாகவும் டாப்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment