Monday 28 April 2014

அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி

இன்னும் 3 நாட்களில் மே 1ந் தேதி அஜித் பிறந்த நாள் வரவிருக்கிறது.
தல பிறந்த நாள் என்பதால் அவரது ரசிகர்கள் அன்னதானம், இரத்த தானம் என பல நல்ல காரியங்களை செய்யும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் அஜித்தின் 25வது படமான அமர்க்களம் படத்தை டிஜிட்டல் வடிவில் மாற்றி மீண்டும் வெளியிடப்போகிறார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கியமான திரையரங்குகளில் இந்த படம் ரிலீஸ் ஆகப்போகிறது.

அதுமட்டுமில்லாமல் அஜித் பிறந்த நாளன்று டிவி சேனல்களிலும் சில சுவாரஸ்யங்கள் நடக்கப்போகிறது. சென்ற வருடம் இறுதியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஆரம்பம் படத்தை ஜெயா டிவியில் ஒளிபரப்பப் போகிறார்கள். இதற்கு போட்டியாக சன் டிவியில் வீரம் படத்தை திரையிடப் போகிறார்கள். டி.வி சேனல்களின் TRP ரேட்டிங்கை அதிகரிக்க இப்படி போட்டா போட்டி நடக்கிறது தொலைக்காட்சிகளில். மேலும் அஜித் பிறந்த நாளான மே 1ந் தேதி கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்துக் கொண்டிருக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியிடவிருக்கிறார்களாம். அப்போ இந்த வருடம் அஜித் ரசிகர்களுக்கு ஹாட்ரிக் கொண்டாட்டம் தான்..

No comments:

Post a Comment